Saturday 10 December 2011

நோவாவின் பேழை


கிறித்துவர்களின் புனித நூலான விவிலியத்தில் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமத்தில் நோவாவினுடைய கதை வருகிறது. உலகில் பாவங்கள் அதிகரித்து மனிதர்கள் தீய குணங்கள் உடையவர்களாக இருந்ததினால் இறைவன் இவ்வுலகை மீண்டும் புதுப்பிக்க எண்ணினார். எனவே, மனிதர்களில் நற்குணங்கள் கொண்டவரும் நீதிமானாகவும் திகழ்ந்த நோவவினை தேர்ந்தெடுத்து அவரிடம் உலக ஜீவராசிகள் அனைத்திலும் ஒரு ஜோடி விலங்கினங்களும் அவற்றுடன் நோவா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்காக பேழையை உருவாக்குமாறு கட்டளையிட்டார். நோவா பேழையை உருவாக்கியவுடன் தான் பூமிக்கு பெருவெள்ளத்தை அனுப்புவதாகவும் அதில் உலகில் உள்ள அனைத்தும் அழிக்கப்படும் நீயும், உன் குடும்பத்தாரும், எஞ்சிய பேழையிலிருக்கும் உயிரினங்கள் மட்டுமே ஜீவிதிருபீர்கள். வெள்ளம் வடிந்தவுடன் புதுவுலகில் நீங்கள் மேன்மையான வாழ்வை வாழுங்கள் என கட்டளையிட்டார். அதன்படி நோவாவும் பேழையை செய்து முடிக்க பெருவெள்ளம் பூமியை ஆட்க்கொண்டது. அனைத்து உயிரினங்களும் மாண்டன பேழையில் எஞ்சியிருந்தவர்களை தவிர. விவிலியத்தின் கூற்றுப்படி வெள்ளம் வடிந்து நோவாவின் பேழை அரராத் என்னும் மலையின் கீழ் கரை ஒதுங்கியதாக உள்ளது. உலகிலுள்ள அனைத்து தொன்மங்களிலும் இதுப்போன்ற கதைகள் ஏராளம் உள்ளன. முகமதியர்களின் தொன்மமான குரான் இவரை நுவா இஸ்லாம் என்றழைக்கிறது. குரானிலும் அரராத் மலையினை அல்ஜூடி அன்று குறிப்பிட்டு அதனை 'பேழையின் உறைவிடம்' என்று கூறுகிறது.

இதனை ஆதாரமாகக்கொண்டு நோவாவின் பேழைக்கான தேடுதலை தொடங்கிய நேஷனல் ஜியோகிராபிக் தொலைகாட்சி குழுமத்தினர் 2009ஆம் அக்டோபர் மாதம் நோவாவின் பேழையை கண்டுப்பிடித்துள்ளனர். அவ்விடத்தில் செய்யப்பட்ட அனைத்து சோதனைகளும் அது நோவாவின் பேழைதான் என்று நிரூபிக்க போதுமானவையாக உள்ளதாக அவர்கள் தெரிவிகின்றனர். நோவாவின் பேழைக்கான தேடுதலின் கண்ணொளி கீழே.  


மேலும் அறிய

விவிலியத்திலும் குரானிலும் மட்டுமல்ல கிரேக்க, இந்து புராணங்களிலும் இவ்வாறான கதைகள் உள்ளன. இந்துக்கள் இவ்வாறாக ஏற்ப்பட்ட பெருவெள்ளத்தினை பிரளையம் என்றும் ஊழிக்காலம் என்றும் அழைக்கிறது. பிரதோஷங்கள் ஏழு வகைப்படும் அவற்றில் ஏழாவதான பிரளையக்கால பிரதோஷத்தினை யாரும் தரிசிக்க முடியாது அன்று இறைவன் ஊழித்தாண்டவம் ஆடுவார் என்று இந்து சமயத்தினரால் நம்பப்படுகிறது. எது எப்படியோ எந்தவொரு தொன்மமும் மனிதனுக்கு நேரிடையாக செய்திகளை வழங்குவதில்லை நாம் தான் அவற்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.


Wednesday 7 December 2011

நாஸ்கா கோடுகள்

இந்த பூமிப்பந்தானது பல்வேறு மர்மங்களையும் அதிசையங்களையும் தன்னகத்தே அடக்கியது. இம்மர்மங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் தருணம் அவை மானுட வாழ்வியலுக்கான புதியதொரு திறவுக்கொலாக அமைந்துள்ளது.

பலகோடி நட்சத்திர மண்டலங்களையும் கிரகங்களையும் உள்ளடக்கிய இந்த அண்டத்தில் பூமி என்னும் இக்கோளில் மட்டுமே உயிர்கள் தோன்றியது முதல் அவ்வுயிர்கள் அண்டத்தை ஆளும் வேட்கை கொண்டு அலைவது வரை அனைத்துமே விந்தையானது.
இதில் இன்றும் மானுட அறிவிற்கு சவால் விடும் அதிசயங்களையும் மர்மங்களையும் இயற்க்கை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவற்றுள் ஒன்றுதான் நாஸ்கா கோடுகள்.
பெரு நாட்டின் தெற்கில் அமைந்திர்க்கும் நாஸ்கா பாலைவனதிலிருந்து, லிமா, பல்பாபம்பாஸ் சமவேளிகளுக்கிடையே  400 கி.மீ., சுமார்  தெற்கு கடற்கரை அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான மனைகொடுகள் அவை. 1994 ல் "உலக தொல்லியல் பாரம்பரிய தளம்" என்று யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.

(குரங்கைப்போன்று அமைந்துள்ள கோடுகள்)

                                        (பிரமிட்போன்று அமைந்துள்ள கோடுகள்)

                                                (மனிதனின் கைகள் போன்று அமைந்துள்ள கோடுகள்)

                                                (சிலந்தி போன்று அமைந்துள்ள கோடுகள்)

                                                (பாடும்பறவை போன்று அமைந்துள்ள கோடுகள்)
                                                  ( நாய் போன்று அமைந்துள்ள கோடுகள்)


நாஸ்கா கோடுகள் 1927 விமானத்தில் இருந்து தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது.அறிவியலாளர்கள் இவற்றை நாஸ்கா கலாசார மக்களால் கி.பி.400 மற்றும் கி.பி.600 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இவற்றை உருவாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர். பலநூறு விலங்கு,பறவை,தாவர இனங்களின் உருவங்களை வெளிப்படுத்தும் இந்த நாஸ்கா மனைகொடுகளை ஒரு சாரர் இவை விவசாயிகள் உருவாகியவை என்றும், மற்றொரு தரப்பினர் இவை வேற்றுலகவாசிகளால் ஏற்ப்படுத்தப்பட்டவை என்று கூறிவருகின்றனர். இவற்றில் எது உண்மை என்று இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. இருந்தும் விஞ்ஞானம் வளராத அக்காலக்கட்டத்தில் இவ்வளவு பிரமாண்டமான கோடுகளை அப்பெரும் நிலப்பரப்பில் எவ்வாறு நேர்த்தியாகவும், துல்லியமாகவும் வரையப்பட்டது? யாரால் வரையப்பட்டது? அவற்றை வரைய வேண்டிய அவசியமென்ன? அவை நமக்கு உணர்த்துபவை யாவை?

இம்முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. விஞ்ஞானம் நாஸ்கா கோடுகளுடன் இன்றும் போரடிக்கொண்டிருகிறது.